ஓசியில் இடியாப்பம் கேட்டு தராத இளைஞரை காவலர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஓசி பிரியாணி, ஓசி டீ, ஓசி தேங்காய் கேட்டு கழக கண்மணிகள் நடத்திய வன்முறை சம்பவங்களை தமிழகமே நன்கு அறியும். அந்த அளவிற்கு, தி.மு.க.வினர் அராஜக செயலில் ஈடுபட்டு இருந்தனர். காலில் சலங்கை கட்டி விட்டது போல இப்பொழுது ஆட்சி அதிகாரம் அவர்களது கையில் உள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதவிர, ஆளும் கட்சி மீது பொதுமக்கள் கடுமையான கோவத்தில் உள்ளனர் என்பதே திண்ணம். இப்படியாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை சேர்ந்த மாணவர் மணிகண்டன் (வயது 21 ) காவல்துறையினர் விசாரணையில் மரணம். இதையடுத்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என காவல்துறையினர் விசாரணையில் அப்பாவிகள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை 6 லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளதாக, பிரபல அரசியல் விமர்சகர் சமீபத்தில் பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார். இந்தியாவின் தலைசிறந்த காவல்துறையாக இருந்த தமிழகம் இன்று தனது நற்பெயரை மெல்ல மெல்ல இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஜமீன் பல்லாவாரத்தில் ஓசியில் இடியாப்பம் கேட்டு தராத ஆத்திரத்தில் கடையை நடத்தி வரும் இளைஞர்களை காவல்துறையினர் அடித்து உதைத்து இழுத்த சென்ற காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் லிங்க் இதோ.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஓசியில் பொருட்களை கேட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்றால், சட்டத்தை காக்க வேண்டிய காவலர்களே இப்படி நடந்து கொள்வது சரியா என நெட்டிசன்கள் கேள்வி? எழுப்பி வருகின்றனர். தமிழக காவல்துறை டிஜிபி-யின் கண்ட்ரோலில் இல்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். அதனை மெய்பிக்கும் வகையில், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.