தி.மு.க ஆன்மீகம் சார்ந்த கட்சி என தலைமைக் கழகச் செய்தி தொடர்பு இணைச்செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியுள்ளார்.
தி.மு.க மூத்த தலைவராக இருப்பவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். இவர், தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் சர்ச்சையில் முடிவது வழக்கம். அந்தவகையில், பிரபல இனணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; சுளுக்கு எடுப்போம், சிலருக்கு நாக்கில் சுளுக்கு எடுக்க வேண்டி இருக்கு, அவர்களுக்கு எடுப்போம். அதேபோல, ஒரு சிலர் பேனாவில் எழுதும் பொழுது தி.மு.க என்றால் கை வேற மாதிரி போகிறது. அந்த கை விரல்களையும் சுளுக்கு எடுக்கப்படும் என்று பத்திரிக்கையாளர்களை மிரட்டும் வகையில் கடந்து ஆண்டு பேசியிருந்தார்.
அதேபோல, தந்தி டி.வி ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் இவர் கலந்து கொண்டார். கோவை மக்களுக்கு ஏன்? தடுப்பூசி முறையாக வழங்கவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் இவரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாவது; கொரோனா தடுப்பூசி வேண்டும் என்றால் பிரதமர் மோடியிடம் கேட்க சொல்லுங்க என்று மிகவும் அலட்சியமாக கோவை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருந்தார். இப்படியாக, இவரது பேச்சு தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆதன் இணையதள ஊடகம் இவரை நேர்காணல் கண்டது அப்பொழுது கூறியதாவது; ஆன்மீக திராவிட மாடல் அரசு என அமைச்சர் சேகர் பாபு கூறுகிறார். இது ஆன்மீக அரசா? அல்லது திராவிட மாடல் அரசா? இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நெறியாளர் மாதேஷ் கேள்வி எழுப்பினார். உங்களுக்கு ஒன்று தெரியுமா? திராவிட மாடலே ஆன்மீகத்தில் இருந்து தான் வருகிறது. அப்போ, சைவ மதத்தில் இருப்பது தான் திராவிட மாடல். இந்த பக்தி மாடலில் இருந்து உருவானது தான் திராவிட மாடல். திராவிடமும் சைவமும் ஒன்னு, நாங்க பேசும் ஆன்மீகம் என்பது சைவ திராவிடம் அல்லது திராவிட சைவம் என குறிப்பிட்டுள்ளார்.
இது பெரியார் மண் என்று ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் திராவிடர் கழக தலைவர் வீரமணி இதுபற்றி எப்பொழுது வாய் திறக்க போகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.