வைகோவையே கட்சியில் இருந்து தூக்கி எறிந்தோம் என தி.மு.க மாநிலங்களவை எம்பி கருத்து தெரிவித்து இருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் கேடயமாக இருந்தவர் வைகோ. தி.மு.க தலைவர் கலைஞருக்கு பிறகு அடுத்து இவர்தான் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் பரவலாகப் பேசப்பட்டது. வைகோவின் எழுச்சி மற்றும் அசுர வளர்ச்சி சன் குடும்பத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வைகோவை கட்சியில் இருந்து வெளியேற்றும் சடங்குகள் நடக்க துவங்கின. தனது மகனுக்குக் கிடைக்க வேண்டிய மணிமகுடம் வைகோவுக்கு போய்விடுமோ என்று அஞ்சியதே இதற்கு முக்கிய காரணம் என்பது பல அரசியல் நோக்கர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.
இதையடுத்து, வைகோ மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி கட்சியை விட்டு அவர் நீக்கப்பட்டார் என்பதை தமிழகம் நன்கு அறியும். இதனிடையே, 1993-ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) என்கிற கட்சியை வைகோ தொடங்கினார் அப்பொழுது, வாரிசு அரசியல் காரணமாக நான் வெளியேற்றப்பட்டதாக உருக்கமாக தொண்டர்கள் மத்தியில் பேசியிருந்தார். இதுதவிர, தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இனிமேல் நமது கட்சி தான் என்று ஆவேசமாக தொண்டர்கள் மத்தியில் முழங்கி இருந்தார்.
இதையடுத்து, காலம் செல்ல செல்ல ம.தி.மு.க. எனும் வாகனத்தில் இருந்து ஒவ்வொரு பாகமாக கழன்று ஒடியது. வைகோவின் நிலையற்ற தலைமையால் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து, ம.தி.மு.க எனும் வாகனத்தை தம்மால் தள்ள முடியாது என்று கருதிய வைகோ தனது கட்சியை வந்த விலைக்கு ஸ்டாலின் தலையில் கட்டிவிட்டார் என்பதே பலரின் கருத்து.
இந்த நிலையில் தான், தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேரில் சென்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் தம்மை இணைத்து கொண்டார். இச்சம்பவம், தி.மு.க தலைவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை திருநின்றவூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதையடுத்து அவர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் கூறினார்; தி.மு.க.வில் இருந்து யார் விலகினாலும் கவலையில்லை, எம்.ஜி.ஆர் போனபோதே கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். தி.மு.க தேம்ஸ் நதி போன்று யார் வந்தாலும் யார் போனாலும் வருத்தப்பட மாட்டோம் என குறிப்பிட்டு உள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/https://www.facebook.com/watch/?v=366025968922591&extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing
இப்படி முட்டு கொடுப்பவர் முதலில் கொண்டு ஓடுவார்கள் 🦥