தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கெடு விதித்தது குறித்து அமைச்சர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட பொழுது திருதிருவென விழித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்-க்கு 5 ரூபாயும், டீசல்-க்கு 4 ருபாய் குறைப்போம். இதுதவிர, காஸ் சிலிண்டர்களுக்கு ரூ.100 குறைப்போம் என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வாக்குறுதி கொடுத்து இருந்தது. விடியல் கிடைக்கும் என நம்பி தி.மு.க.விற்கு பொதுமக்கள் பெரும் அளவில் வாக்களித்து வெற்றி பெற வைத்தனர். இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு நவம்பர் 4, 2021 முதல் இன்று வரை (இரண்டு முறை) பெட்ரோல் மீது ரூ.14.5 & டீசல் மீது ரூ. 17 குறைத்துள்ளது. இதன்மூலம், இந்திய மக்களின் நலனை என்றும் விரும்பும் அரசு இது என்பதை பா.ஜ.க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மதுவிற்பனை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொருளாதார புளி ஜெயரஞ்சன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வி?; பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இன்னும் 72 மணி நேரம் தமிழக அரசுக்கு கெடு விதிக்கிறேன். இதனை, நிறைவேற்ற தவறும் பட்சத்தில் கோட்டையை பா.ஜ.க முற்றுகையிடும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளாரே இது பற்றி உங்கள் பதில் என்ன என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, இரு அமைச்சர்களும் நீ பதில் சொல் இல்லை நீ பதில் சொல் என்பது போல திருதிருவென விழித்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.
அதன் லிங்க் இதோ.
இதனிடையே, தி.மு.க மூத்த தலைவரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில், பொள்ளாச்சி எம்பி சண்மூக சுந்தரம், சேலம் எம்பி பார்த்திபன் மற்றும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டவர்கள் டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சமீபத்தில் சந்தித்தனர். அப்பொழுது, பருத்தி நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு உரிய தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினர். இதையடுத்து, பத்திரிக்கையாளர்களை தமிழக எம்.பிக்கள் குழு சந்தித்தன. அப்பொழுது, வின் டிவியை சேர்ந்த டெல்லி நிருபர் தி.மு.க எம்பி கனிமொழியிடம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்;
கடந்த அ.தி.முக ஆட்சியில் பெண் விதவைகள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக சொன்னீர்களே இப்பொழுது குறைந்து விட்டார்களா என கேள்வி எழுப்பினார்? இதனை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி, மழுப்பலான பதிலை அளித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அருகில் இருந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் உங்களிடம், ஒரு கேள்வி இருக்கு மேடம் என்று நிருபர் கேட்க வாங்க அக்கா இங்கிருந்து ஓடிவிடலாம் என்பது போல ஜோதிமணியும் ஒட்டம் எடுத்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.