பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தமிழக அரசு குறைக்கவில்லை என பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.
சொல்வதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என தேர்தல் சமயத்தில் தி.மு.க மக்களுக்கு வாக்குறுதியை வழங்கி இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இன்று வரை மக்களின் கோவத்தையும், வெறுப்பினையும் தொடர்ந்து பெற்று வருகிறது இந்த அரசு. எங்கள் ஆட்சியில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவோம் என தி.மு.க கூறியிருந்தது. ஆனால், ஜிஎஸ்டி பற்றி எதுவும் பேசாமல் வழக்கம் போல கள்ள மெளனம் காத்து வருகிறது. பெட்ரோல், டீசல் VAT முறையில் இருந்தால் நினைத்த பொழுது வரியை கூட்டலாம், அதற்கு தடையாக ஜிஎஸ்டி இருக்குமோ? என தி.மு.க அரசு தயக்கம் காட்டுகிறது என பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப்படவில்லை. இங்கு வரி அதிகமாக உள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேசிய நலன் கருதி வரியை குறைக்க வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தினமலர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
’