தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கூட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இதன்படி, “சி” மற்றும் “டி” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 20% 2023-224-இல் வழங்க முதல்வர் ஆணையிட்டார்.
இந்நிலையில், இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முடிவாகி உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கையெழுத்தானது.
தமிழ்நாட்டு மக்களை மதுபோதைக்கு அடிமையாக்கி மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் அதிக வருமானங்கள் வருவதால் டாஸ்மாக் பணியாளர்களை குஷிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கும் திமுக அரசு தூய்மை பணியாளர்களுக்கு விவசாய மக்களுக்கு ஏன் வழங்கவில்லை ? மற்ற மாநிலத்தில் உள்ள முதல்வர்கள் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டால் தமிழ்நாட்டில் தலைகீழாக உள்ளது. திமுக அரசு நீட் தேர்வை ஒழிக்கப்போகிறேன் என்று நாடகமாடுவதை விட்டுவிட்டு மதுவிலக்கை அமல்படுத்தினால் நாடும் முன்னேறும் மக்களும் முன்னேறுவார்கள் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.