மெல்ல மெல்ல ஹிந்து விரோத போக்கை தீவிரப்படுத்தும் தி.மு.க அரசு.!

மெல்ல மெல்ல ஹிந்து விரோத போக்கை தீவிரப்படுத்தும் தி.மு.க அரசு.!

Share it if you like it

தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஹிந்து உணர்வுகளை புண்படுத்தும் விதமான தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

  • பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்து அறநிலையத்துறை என்கின்ற பெயரை மாற்றி வெறும் அறநிலையத்துறை என்று பெயர் மாற்றம் செய்தது.
  • ஹிந்து மக்களின் வழிபாட்டு முறைகளை கிண்டல் செய்யும் திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக நியமனம் செய்தது.
  • மதம் மாற்றும் சக்திகள் மற்றும் மாவோயிஸ்ட் அனுதாபியாக ராஜ் மரியா சூசை இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து வரும் நிலையில், Tamil Nadu Public Service Commission பதவியில் அவரை தி.மு.க அரசுஅமர்த்தியது.
  • ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசுபவரும், கள்ளக் காதலுக்கு புது விளக்கம் கொடுத்த சுப.வீ-க்கு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக தமிழக அரசு அண்மையில் நியமனம் செய்தது.
  • தி.மு.க அரசு திட்டமிட்டே ஹிந்துக்களை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொதுமக்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில். அரசின் உயர் பொறுப்புகளில் ஹிந்து மத வெறுப்பாளர்களை தமிழக அரசு நியமனம் செய்வதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

Image

 


Share it if you like it