மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான் – நடிகை விந்தியா !

மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான் – நடிகை விந்தியா !

Share it if you like it

முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா ? அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின்
மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’ என முதல்வர் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கருத்தை விமர்சித்து அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா கூறியதாவது :-

“உதயநிதி, துர்கா ஸ்டாலினுக்கு ஏமாற்றம் இருக்காது. அவர்களின் குடும்பங்களுக்கு ஏமாற்றம் இருக்காது. ஆனால் மக்களுக்கு திமுக ஆட்சியே ஏமாற்றம்தான். திமுக-வே மக்களை ஏமாத்தி ஆட்சிக்கு வந்தாங்க. இன்னைக்கும் கட்சித் தொண்டர்களை ஏமாத்திதானே கட்சியையும், ஆட்சியையும் நடத்திட்டு இருக்காங்க. திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டும்தான் இருக்கு. மக்களுக்கு எதுவுமே செய்யல. மக்களுக்கு நீங்க இலவச பொருள் தரலன்னாலும் பரவால்ல, மக்களுக்கு பாதுகாப்பே இல்ல. திமுக தொண்டர்களே உதயநிதி துணை முதல்வர் ஆவதை விரும்புவதில்லை,உதயநிதியை திணிக்குறாங்க, என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *