திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழக முதல்வராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சாணக்யா யூடிப் சேனலின் நிறுவனரான ரங்கராஜ் பாண்டேவின் சமூக வலைதளத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூன்றாண்டு ஆட்சி எப்படி இருந்தது என கேள்வி எழுப்பி பதிவிட்டனர். இந்த கேள்விக்கு சுமார் 20,370 பேர் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுள் மூன்றாண்டு ஆட்சி சூப்பர் என 10.14 சதவீத பேரும், பரவாயில்லை என 7.52 சதவீத பேரும், மோசமென 82.34 சதவீத பேரும் வாக்களித்துள்ளனர்.
