தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக தீவிரமாக கள பணிகளை செய்து வருகிறார். தேர்தலின்போது திமுக அள்ளிவீசிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் சமூக வலைத்தளத்தில் மட்டும் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம் 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம் என்று புரளி பேசி வருகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒவ்வொன்றாக தூசி தட்டி கேட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக, பெருந்துறையில் ஆட்டோ நகர் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி எண் 392 நிறைவேற்றவில்லை. ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று சொல்லி ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை, ஈரோடு வர்த்தக மையம், நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த மக்கள் விரோத திமுக கூட்டணியைப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, பாஜக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.