திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை, இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது – அண்ணாமலை !

திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை, இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது – அண்ணாமலை !

Share it if you like it

தமிழக அரசை நடத்த, கருவூலத்தில் பணம் இல்லை. ஏனென்றால், எட்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. திமுக ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி புதிய கடன் வாங்கியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார பாராளுமன்ற உறுப்பினரை அரக்கோணம் பெற்றிருக்கிறது. ஆனால், அவரால் திமுகவுக்கு மட்டும்தான் பயனே தவிர, அரக்கோணம் தொகுதிக்கு எந்தப் பயனும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு எந்தத் திட்டங்களையோ, மக்கள் பணிகளையோ அவர் கொண்டு வந்ததில்லை. மாறாக, 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் என்ற அவப்பெயர்தான் தொகுதிக்கு வந்திருக்கிறது.

திரு. ஜெகத்ரட்சகன் நடத்தும் மருத்துவக் கல்லூரியில், கல்வி இடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து டொனேஷன் வாங்கியதை, கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்த 400 கோடி ரூபாய், அவர் நடத்தும் சாராய ஆலையில் எழுதிய பொய்க் கணக்கு 500 கோடி ரூபாய், அவர் நடத்தும் அறக்கட்டளையின் பணத்தை தனது சொந்த செலவுக்காகப் பயன்படுத்திக் கொண்டது 300 கோடி, 25 கோடி ரூபாய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்ததாக போலியாக கணக்கு எழுதியது, மருத்துவக் கல்லூரி இடங்களை விற்க இடைத்தரகர்களுக்குக் கொடுத்தது 25 கோடி என 1,250 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, அவரது வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில் கண்டறிந்திருக்கிறார்கள். தமிழகத்தின் நீட் அரசியலின் ரகசியமும், டாஸ்மாக் கடைகளை மூடாமல் இருப்பதன் ரகசியமும் இந்தப் பணத்தில்தான் இருக்கிறது.

ஜெகத்ரட்சகன், டிஆர் பாலு இருவரின் சாராய ஆலைகளில் இருந்துதான் டாஸ்மாக் கடைகளுக்கு 44% சாராயம் கொள்முதல் செய்யப்படுகிறது. டாஸ்மாக்கை மூட திமுக எப்படி முன்வரும்? நீட் தேர்வை ஒழிப்போம் என்று கையெழுத்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. சமீபத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு நடந்த மைதானத்தைச் சுற்றியுள்ள குப்பைத் தொட்டிகளில், நீட்டை எதிர்த்து திமுக கையெழுத்து வாங்கிய அஞ்சல் அட்டைகள் கிடந்தன. தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வி வேண்டுமென்றால், நீட் தேர்வு வேண்டும் என்பது திமுக தொண்டர்களுக்கே நன்கு தெரியும். அதனால்தான் திமுகவின் நீட் தேர்வு எதிர்ப்பை, திமுக தொண்டர்களே குப்பைத்தொட்டியில் போட்டு விட்டார்கள்.

அமைச்சர் காந்திக்கு அவரது பெயர் சற்றும் பொருத்தமற்றது. 1994 ஆம் ஆண்டு, கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். தற்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்து பணம் குவித்துக் கொண்டிருக்கிறார். இலவச வேட்டி சேலை வழங்குவதில், பெருமளவில் ஊழல் நடந்திருக்கிறது.

தமிழக அரசை நடத்த, கருவூலத்தில் பணம் இல்லை. ஏனென்றால், எட்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. திமுக ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில், இரண்டு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் கோடி புதிய கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு ரேஷன் அட்டையின் மீதும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே பணம் இல்லாத நிலை வரப் போகிறது. அனைத்துக்கும் காரணம், திமுகவின் ஊழல். எல்லா துறைகளிலும் ஊழல்.


Share it if you like it