மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் இண்டி கூட்டணியிலுள்ள திமுக கட்சி வென்றது. ஆனால் திமுகவுக்கு வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது குறைந்துள்ளது. பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. திமுக கடந்த 2019 தேர்தலில் 33.52 சதவீத வாக்குகளையும், பாஜக 3.62 சதவீதம் வாக்குகளையும் பெற்றது. ஆனால் தற்போது நடந்த தேர்தலில் 26.93 சதவீத வாக்குகளையும், பாஜக 11.24 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. திமுக தேர்தலில் வென்றாலும் வாக்குகள் சரிந்துள்ளது திமுக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.