அரசின் நலத்திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை ஆபாசமாக பேசியுள்ளார் தி.மு.க.வை சேர்ந்த ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று 10 மாதங்களை கடந்த விட்டது. விடியல் கிடைக்கும் என்று ஆசைப்பட்ட பொதுமக்கள் வாழ்வில் இன்று வரை இருட்டும், இரவில் மின்வெட்டு மட்டுமே தொடர்கதையாக உள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் சிறப்பாக நடைபெற்று வந்த நலத்திட்டங்கள் தடை செய்யப்பட்டது. உதாரணத்திற்கு, ”அம்மா உணவகம் தடை, அம்மா கிளினிக் மீது தாக்குதல் என பொற்கால ஆட்சியில் பொல்லாத சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தி.மு.க. ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள், பள்ளி மாணவிகள் அதிலும் குறிப்பாக, பெண் காவலர்களுக்குகே போதிய பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின், தி.மு.க. கவுன்சிலர்கள் செய்த அராஜகங்கள், கட்டபஞ்சாயத்துகளை இன்றும் மீடியான் யூ டியூப் சேனலில் காண முடியும். சென்னை ராயபுரம் பகுதியில் தி.மு.க.வின் 51-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருடைய கணவர் ஜெகதீசன். இவர், மதுபோதையில் தெருவில் நின்று கொண்டு அடாவடி செய்துள்ளார். அப்போது, ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து, எழுந்த வாக்கு வாதத்தில் ஜெகதீசன் மற்றும் அவரின் கூட்டாளிகள் காவலரை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தனர். அதனை தொடர்ந்து, சென்னை கொடூங்கையூரில் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவி என்பவர் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டி வருகிறார். இவரிடம், வீடு கட்ட வேண்டும் என்றால் தனக்கு 10 லட்ச ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், என தி.மு.க.வின் 34-வது வார்டு பெண் கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் தனது அடியாட்களுடன் மிரட்டியுள்ளார்.
இப்படியாக, தொடர்கிறது இந்த பொற்கால (பொல்லாத) ஆட்சி. தி.மு.க. கவுன்சிலர்கள் தான் இப்படி என்றால், அவர்களை விட ஒருபடி மேலே சென்று உள்ளார் ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ எபினேசர். தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக எங்களுக்கு கிடைக்கவில்லை என தி.மு.க எம்.எல்.ஏ.வை சூழ்ந்து கொண்டு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, நடந்த வாக்கு வாதத்தில் கடும் கோவம் அடைந்த எம்.எல்.ஏ ஆபாசமான முறையில் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா என்னும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.