செப்டம்பர் 20, 1989-ஆம் ஆண்டு இந்தியா டுடே.,விற்கு பேட்டியளிக்கும் பொழுது ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
கேள்வி ; அவசியம் ஏற்பட்டால், தந்தையின் இடத்திற்கு நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்களா? ராஜீவ் காந்தியைப் போல?
ஸ்டாலின் ; காங்கிரஸ் ஜனநாயக ரீதியான இயக்கம் அல்ல, அங்கு எதுவும் நடக்கலாம். தி.மு.க. அப்படி அல்ல. தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்த்தெடுக்க வேண்டும். என்னை விட ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒதுக்கி விட்டு என்னைத் தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
எனக்கு பிறகு என் குடும்பத்தில், இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்று தமிழக மக்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக மக்கள் முகத்தில் கரியை பூசும் விதமாக. உதயநிதிக்கு மிகப் பெரிய பொறுப்பையும், சட்டமன்ற வேட்பாளராக, நிறுத்தி அழகு பார்த்தார். என்னைத் தலைவராக தேர்ந்தெடுக்கும், சூழல் இல்லை என்று 1989-ல் கூற ஆரம்பித்த பச்சை பொய் இன்று உதயநிதியுடன் நிறைவு பெற்று உள்ளது.
தி.மு.க மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள். எனது மகன் அரசியலுக்கு வரமாட்டான் என்று ஸ்டாலின் போல சமீபத்தில் உண்மையை பேசி இருந்தார்.