எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தஞ்சை மேயர் ஓட்டம் எடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் உள்ளன. ஒருபுறம், கொலை, கொள்ளை, திருட்டு, இருட்டு. மறுபுறம், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.களின் செயல்பாடு. இப்படியாக, விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, பொதுமக்கள் ஆட்சியாளர்களை பார்த்து கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். இதனிடையே, தி.மு.க.வின் தஞ்சை மாவட்ட மேயராக இருப்பவர் சண்.இராம நாதன். துணை மேயராக டாக்டர். அஞ்சுகம் பூபதி உள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில், மேயரின் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது, அ.தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் மேயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, உரிய பதில் அளிக்காமல் மேயர் ஓட்டம் எடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தி.மு.க இளைஞரணி செயலாளரும் திருவல்லிகேணி – சேப்பாக்க எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்கும் முன்பு தஞ்சையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்தவகையில், கட்சி தொண்டர்கள் மற்றும் கழக கண்மணிகள் உதயநிதியை வரவேற்றனர். அப்போது, தஞ்சை மேயர் தனது அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்து ஆசி வாங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. சமூக நீதி, சுயமரியாதை, பெண் விடுதலை, என்று ஊர் முழுக்க பிரச்சாரம் மேற்கொள்வது எந்த கட்சி என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர் என்பது குறிப்பிடத்தக்கது.