திமுக அமைச்சர் ஆ.ராசா மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்ஜிஆரை மிகவும் தரக்குறைவாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த காணொளியில் மேடை ஒன்றில் பேசும் திமுக அமைச்சர் ஆ.ராசா அவர்கள், “நான் எம்ஜிஆரை மதிக்கிறதே இல்ல” ஒரு வெள்ளைக்காரன் வெளியில இருந்து வந்தவனுக்கு இந்த மண்ணின் மாண்பை மதிக்கக்கூடிய பேராண்மை இருந்தது, ஆனா எம்ஜிஆர் என்ற அந்த லூசுக்கு அது இல்லையே ” இவ்வாறு ஒரு புகழ் பெற்ற நடிகராகவும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த முன்னாள் முதல்வராகவும் இருந்த ஒருவரை திமுக அமைச்சர் ஆ.ராசா பேசியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ஆ.ராசாவை வறுத்தெடுத்து வருகின்றனர். சி.ராஜகோபாலாச்சாரி மற்றும் கே.காமராஜருக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்ற தமிழகத்தின் மூன்றாவது முதலமைச்சர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/MSBalajiMSB/status/1752238266055868758?s=20