எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் கருத்திற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகை கடன் தள்ளுபடி, மீண்டும் மஞ்சள் பை திட்டம் என பல்வேறு பணிகளை மக்களுக்கு செய்து உள்ளோம் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, அவரது கவனம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பக்கம் திரும்பிய பொழுது கூறியதாவது; 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அவ்ளோ தைரியமா? பாத்துடலமா? இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது. அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை தாண்ட முடியாது என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இவரின், பேச்சு பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அமைச்சருக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்; தி.மு.க ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக உள்ளனர் என்பதற்கு அமைச்சர் பன்னீர் செல்வம் நல்ல உதாரணம். இவர், என்ன பேரிகார்டு போட்டு தடுக்கும் செக்யூரிட்டி வேலையா பார்க்கிறார். நெஞ்சில் துணிவு இருந்தால் கரூரில் வந்து என்னை தடுக்கட்டும் பின்னர் என்ன நடக்கிறது என்பது அமைச்சருக்கு தெரியும் என அமைச்சரின் மிரட்டலுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.
இதனிடையே, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மதுவிற்பனை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொருளாதார புளி ஜெயரஞ்சன் ஆகியோர் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, பத்திரிக்கையாளர் ஒருவர் அண்ணாமலையின் 72 மணி நேரம் கெடு குறித்து கேள்வி எழுப்பிய பொழுது. இரு அமைச்சர்களும் நீ பதில் சொல் இல்லை நீ தான் பதில் சொலல வேண்டும் என்பது போல திருதிருவென விழித்த காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
அதன் லிங்க் இதோ.