அமைச்சர் பொன்முடி பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்மணியை இழிவுப்படுத்தியது தொடர்பான கேள்வியை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரிடம் நிருபர் கேட்ட போது அவர் திருதிருவென விழித்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சாரக இருப்பவர் பொன்முடி. இவர், விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நடைபெற்ற நியாய விலை கடை திறப்பு நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கலந்து கொண்டார். அப்போது, பேசிய அமைச்சர், ஆண் பெண் சமம். இந்த, ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. நீங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் தானே என்று பொதுமேடையிலேயே அப்பெண்ணிடம் அமைச்சர் கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்மணியை உயர்கல்வித்துறை அமைச்சர் அவமதிப்பு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டன. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமைலை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் பொன்முடிக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது, அமைச்சர் பொன்முடி பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்மணியை இழிவுப்படுத்தியது தொடர்பான கேள்வியை நிருபர் ஒருவர் முன்வைத்து இருக்கிறார். இதற்கு, உரிய பதில் அளிக்காமல் வேண்டாம் விடுங்க என்று கூறிவிட்டு அவர் மேலும் எதுவும் பேசாமல் திருதிருவென விழித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.