தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. அதில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பின்னர் அம்மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இம்மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு என்று வைக்காமல், சனாதன ஒழிப்பு என்று வைத்துள்ளதற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறி, சிலவற்றை வந்து நாம் ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்கக்கூடாது என்றும், கொசு,டெங்கு,கொரோனா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கு எதிராக ஒரு அமைச்சராக உதயநிதி பேசியுள்ளார்.
இவ்வாறு உதயநிதி பேசிய சர்ச்சையான பேச்சுக்கு கொதித்தெழுந்த மக்கள் அவர்மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், தான் தனிப்பட்ட முறையில்தான் பேசினேனே தவிர அமைச்சர் முறையில் பேசவில்லை என்று உதயநிதி கூறியுள்ளார். ஆனால் சனாதன மாநாட்டில் ஒரு அமைச்சராக தான் கலந்துகொண்டதாக அவரே தெரிவித்துள்ளார்.
தனது பேச்சு தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் தோல்வியை தந்துவிடுமோ என்று பயந்து தற்போது உண்மைக்கு மாறாக பொய் பேசி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அவர்களின் நிலைப்பாட்டின் உறுதியானது தான், ஒரு அரசியல்வாதியின் தன்மையை வரையறுக்கிறது. திமுக அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது. இதை திமுக வாரிசு உதயநிதி ஸ்டாலின் தரப்பில் நம்மை மீண்டும் சரியென நிரூபித்துள்ளது. திமுக அரசின் அமைச்சராக இருந்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இன்று நீதிமன்றத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரத்தில் மாநில அரசின் அமைச்சராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் வரும்போது திமுக அவர்களின் சித்தாந்தத்தை புதைத்துவிட்டு நாடகம் தொடங்குகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/BJP4TamilNadu/status/1713926773854060982?s=20