செந்தில் பாலாஜியின் அராஜகம்: வைரலாகும் வீடியோ!

செந்தில் பாலாஜியின் அராஜகம்: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடைகளில் மாதம் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக விற்பனையாளர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் கம்பெனி என்கிற பெயரில், டாஸ்மாக் கடைகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது குற்றச்சாட்டு எழுந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் சில வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், டாஸ்மாக் கடைகள் ஒவ்வொன்றும் மாதம் 40,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை மாமூல் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறாராம். இதனால், குவார்ட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் கமிஷன் வாங்கிய நிலையில் தற்போது 10 ரூபாய் வாங்குகிறார்கள்.

விருதுநகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் குடிமகன் ஒருவர் குவார்ட்டர் சரக்கு கேட்டிருக்கிறார். அந்த பாட்டிலின் அசல் விலை 130 ரூபாய். வழக்கமாக 5 ரூபாய் சேர்த்து 135 ரூபாய்க்கு விற்பார்களாம். ஆனால், இந்த முறை 10 ரூபாய் சேர்த்து 140 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த குடிமகன் எதற்காக 10 ரூபாய் கூடுதலாகத் தரவேண்டும் என்று கேட்கிறார். அதற்கு, டாஸ்மாக் கடையின் விற்பனையாளரோ, அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடை ஒவ்வொன்றும் மாதம் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

எங்களுக்கு சம்பளம் 10,000 ரூபாய்தான். அப்படி இருக்க நாங்கள் என்ன சொத்தை வித்தா அமைச்சருக்கு கப்பம் கட்ட முடியும். ஆகவேதான், குவார்ட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் வாங்கியதை, தற்போது 10 ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம் என்று கூறுகிறார். ஆனாலும் விடாத அந்த குடிமகன், சரி 10 ரூபாய் தருகிறேன். ஆனால் எனக்கு பில் போட்டு குடு என்று கேட்கிறார். அதற்கு அந்த விற்பனையாளோ அப்படியெல்லாம் பில் போட்டு தரமுடியாது என்று கூறுகிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு தி.மு.க.வின் அராஜகத்தையும், செந்தில் பாலாஜியின் அடாவடியையும் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it