லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் விடுதி வார்டனை, தி.மு.க. எம்.எல்.ஏ. சந்தித்த விவகாரம் விஸ்வரூம் எடுத்திருக்கிறது. அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் படித்த இவர், கடந்த மாதம் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த மத மாற்ற டார்ச்சர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, விடுதி வார்டன் சகாயமேரி, லாவண்யாவை, பள்ளியின் கழிப்பறைகள், விடுதி ஆகியவற்றை சுத்தம் செய்யச் சொல்லியும், சமையல் பாத்திரங்களை கழுவச் சொல்லியும் கொடுமைப்படுத்தியதாக மாணவி வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். இதையடுத்து, வார்டன் சகாயமேரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில்தான், சிறையிலிருந்த சகாயமேரி, கடந்த 14-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, திருச்சி கிழக்குத் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான இனிகோ இருதயராஜ், சிறைச்சாலைக்கே சென்று சகாயமேரிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அதாவது, லாவண்யா தற்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் சகாயமேரிக்கு, ஆளும்கட்சியின் எம்.எல்.ஏ. ஒ்ருவர் வரவேற்புக் கொடுத்தது பெரும் சர்ச்சையானது. இந்த இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இவர், ஒரு கிறிஸ்தவராக சகாயமேரிக்கு வரவேற்புக் கொடுத்திருந்தால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால், மக்கள் பிரிதியான இவர், ஒரு குற்றவாளிக்கு சால்வை அணிவித்ததுதான் விவகாரமே. க்கள் பிரதிநிதியான இனிகோ இருதயராஜ், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டுமே தவிர, தான் சார்ந்த மதத்துக்கு மட்டும் விசுவாசமாக இருக்கக் கூடாது என்று கண்டனக்குரல்கள் கிளம்பின.
இந்த விவகாரம் நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருந்தது. இதுதான் தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு மக்கள் பிரதிநதி எப்படி சிறையிலிருந்து வரும் ஒரு குற்றவாளியை சந்தித்து சால்வை அணிவிக்கலாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்வி மேல் கேட்டு துளைத்தெடுத்து வருகிறார்கள். மேலும், முக்கியக் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் இனிகோ இருதயராஜை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்றும் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்வதறியாது தவித்து வருகிறாராம் ஸ்டாலின். அதேசமயம், எதிர்ப்பு வலுக்கும் பட்சத்தில் இனிகோ இருதயராஜை பதவி விலகச் சொல்லும் முடிவில் ஸ்டாலின் இருப்பதாகவும் தகவல்.