பேனரில் தனது பெயர் இல்லாததால் அரசு அதிகாரிகளை வசைபாடிய தி.மு.க எம்.எல்.ஏ..!

பேனரில் தனது பெயர் இல்லாததால் அரசு அதிகாரிகளை வசைபாடிய தி.மு.க எம்.எல்.ஏ..!

Share it if you like it

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 74 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதற்கு முன்னதாக அங்கு வந்த பூந்தமல்லி தி.மு.க எம்எல்ஏ கிருஷ்ணசாமி, அங்கிருந்த பேனரில் தனது பெயர் இல்லாததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். பேனரில் தனது பெயர் ஏன்? இடம் பெறவில்லை என்று அரசு அதிகாரிகளை மிரட்டியுள்ளார் எம்.எல்.ஏ. இதனை அடுத்து அதிகாரிகள் மன்னிப்பு கேட்ட பின்னர் சமாதானம் அடைந்து உள்ளார் எம்.எல்.ஏ. தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன்ன பிரமாதம் போக போக பாருங்க விடியல் ஆட்சியின் சிறப்பை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

 


Share it if you like it