தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு இவ்வாறு கூறியிருந்தார்.
காவல்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும். எந்த பிரச்னைக்காகவும் யாருக்காகவும் காவல்நிலையத்திற்கு, சென்றோ அல்லது தொலைப்பேசியில் பேசவோ கூடாது. காவல்துறை தன்வசம் இருப்பதால். அவை தொடர்பான புகார்களை அமைச்சர்கள் தன்னிடமே கூற வேண்டும். அமைச்சர்கள் மீது புகார்கள் வந்தால், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற சர்ச்சைகளுக்குள் அமைச்சர்கள் சிக்ககூடாது என்று முதல்வர் அறிவுரை கூறியிருந்தார்.
தஞ்சாவூரில் சில தினங்களுக்கு, முன்பு. அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. ’மோகன்’ தலைமையிலான போலீசார் ஊரடங்கை. மதிக்காத நபர்களுக்கு கடுமையான, எச்சரிக்கை மற்றும் அபராதம் விதித்து வந்தார். அப்போது அங்கு வந்த லோடு, ஆட்டோவுக்கு எஸ்.ஐ. மோகன் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவில் வந்தவர்கள் தி.மு.க. நகர துணைச் செயலாளர் நீலகண்டனுக்கு போன் செய்துள்ளனர்.
சில நிமிடங்களில் தனது ஆதரவாளர்களுடன், அங்கு வந்த நீலகண்டன் ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை உடனே ரத்து செய்ய வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தி.மு.க நிர்வாகியோடு வாக்குவாதம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி என்பவர் தனது நண்பர்களுடன் குடிபோதையில் காரில் வந்துள்ளார். காரை நிறுத்தி வாகன சோதனை செய்த பொழுது. முக கவசம் அணியாமல் அமர்ந்திருந்த ரவியிடம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஏன்? தேவையில்லாமல் வெளியே சுற்றுகிறீர்கள் என்று கேட்டுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் கோமதி. குடிபோதையில் இருந்த தி.மு.க பிரமுகர் ரவி. “நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம். கேஸ் போடறதுனா போட்டுக்கோ” என்று தனது வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்றைய தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பெண் காவல் ஆய்வாளரிடம் குடி போதையில் வாக்குவாதம் செய்த கழக முன்னோடி..!
தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் கார் புறப்படும் நேரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ திடீர் என்று நுழைந்தாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ எழிலனை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடி லிங்கம், தடுத்து நிறுத்தி உள்ளே செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த எழிலன், நான் யார் தெரியுமா என்று கேட்டபடி முதலமைச்சர் கார் அருகே சென்றார். பின்னர் முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட பின்பு காவலர்கள் இருக்கும் பகுதிக்கு வந்த எம்.எல்.ஏ யார் அது என்னை பார்த்து யார் நீ என கேட்டது என குரலை உயர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரிகளை தி.மு.கவினர் தொடர்ந்து அவமதிக்கும் செயல் அதிகரித்து கொண்டே இருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.