விபச்சார ராசாவே… சோறுதான திங்கற… வெளுத்து வாங்கிய பெண்மணி!

விபச்சார ராசாவே… சோறுதான திங்கற… வெளுத்து வாங்கிய பெண்மணி!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவை பெண்மணி ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆ. ராசா. இவர், திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு சென்னையில், சமீபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் தி.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இவ்வாறு பேசினார்;

நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர், விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார். 

ஆ.ராசாவின், அருவருக்கதக்க பேச்சு ஹிந்து பெண்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் ஆபாச பேச்சாளரின் கருத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை, பெண்மணி ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது; 2ஜி ஊழல் ராசாவே உன்னிடம் சில கேள்விகள். கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் சிந்தித்து பதில் சொல். எங்கேயோ, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனுஸ்மிருதி எனும் ஓலைச்சுவடியில் புரியாத மொழியில் எழுதப்பட்ட ஒன்றை ஒட்டு மொத்த ஹிந்துமத பெண்களுடன் ஒப்பிட்டு பேசுவதன் நோக்கம் என்ன.

ஹிந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரி என்று பேசிவிட்டால், மக்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மின்சார கட்டணம், போதை பொருட்கள் கலாச்சாரம், கொலை, கொள்ளை என அனைத்து பிரச்சனைகளையும் தமிழக மக்கள் மறந்து விடுவார்கள், எல்லாம் திசை திருப்பப்படும் என்று நினைக்கிறாயா? விபச்சார ராசாவே என மிக ஆவேசமாக பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it