கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ABVP தென் தமிழக மாநில இணை செயலாளர் விஜயராகவன் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ஆளும் திமுக கட்சியின் திறனற்ற அலட்சிய போக்கால் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் மரணம்
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் 55 யை எட்டியுள்ளது. ஆளும் திமுக கட்சியின் திறனற்ற அலட்சிய போக்கு தான் இந்த மரணங்களுக்கு காரணம் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு கருதுகிறது.
இன்றளவும் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கள்ளச்சாராய தயாரிப்பினை நிறுத்தி தடை செய்வதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக தேவை. வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என ABVP வலியுறுத்துகிறது.
CB-CID -யிடம் விசாரணையில் உள்ள இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு ABVP சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கமும் மற்றும் மாவட்ட ஆட்சியர் பணி இடமாற்றமும் செய்வது மட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பான அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ABVP சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இலாபங்களை காட்டிலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் படி தமிழக அரசை ABVP கேட்டுக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அவரது உற்றார் உறவினர்களுக்கும் நியாயம் கிடைப்பதற்காக அவர்களோடு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளிக்கிறது.
மேதகு. தமிழக ஆளுநர் அவர்கள் இந்நிகழ்விற்கு தலையிட்டு இது போன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ABVP சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
நாம் எல்லோரும் பொறுப்பான குடிமகன்கள் என்ற ரீதியில் கள்ளச்சாராயத்தின் மூலமாக நிகழும் உயிரிழப்புகளை தவிர்ப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.