தி.மு.க.வினரை இவ்வளவு கேவலமாக விமர்சித்தாரா பெரியார்?

தி.மு.க.வினரை இவ்வளவு கேவலமாக விமர்சித்தாரா பெரியார்?

Share it if you like it

பொண்டாட்டியைக் கொடுத்து ஓட்டுவாங்கும் அளவுக்கு முன்னேற்ற கழகக்காரர்கள் செல்வார்கள் என்று பெரியார் சொல்லி இருப்பதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வினரை பொறுத்தவரை எதற்கெடுத்தாலும் பெரியார், பெரியார் என்று கூறிவருகின்றனர். அடுப்படியில் இருந்த பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்து, படிக்க வைத்தது பெரியார்தான். பட்டியல் சமூகத்தினர் கல்வி கற்க காரணமே பெரியார்தான். ஜாதியை ஒழித்தது பெரியார்தான். பட்டியல் சமூகத்தினர் நீதிபதிகளாக இருப்பது பெரியார் போட்ட பிச்சை. பட்டியல் சமூகத்தினர் சாலையில் நடப்பதற்கு காரணமே பெரியார்தான். அவ்வளவு ஏன், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை படித்து இவ்வளவு பெரிய ஆளாக உருவானதற்கு காரணம் பெரியார்தான் என்றெல்லாம் உருட்டி வருகின்றனர்.

ஆனால், உண்மை என்னவென்றால் தமிழகத்தில் கல்விக்காக போராடியவர் காமராஜர்தான். ஏழை மாணவர்கள் கல்விக் கற்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர். இதனால்தான் அவரை கல்விக்கண் திறந்த காமராஜர் என்று கூறிவருகிறோம். தவிர, பட்டியல் சமூகத்தினரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தவர் பெரியார். தாழ்த்தப்பட்ட பறையர், சக்கிலியர் சமூகத்தினரிடமிருந்து உயர் ஜாதியைச் சேர்ந்த நாயுடு பெண்கள் தங்களது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெரியார் கூறியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், ஹிந்துக்கள் விபசாரியின் மகன்கள் என்று சொல்லி தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. ஆ.ராசா ஒரு நெருப்பை பற்ற வைத்தார். இதற்கு 1916-ல் எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதியை ஆதாரமாகக் காட்டினார். ஆனால், மனுஸ்மிருதியில் அவ்வாறு கூறப்படவில்லை என்றும், ஆங்கிலேயரான கார்டுவெல் மொழிபெயர்த்ததில் தவறாக குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே, பெரியார் எழுதியதாகக் கூறி ஒரு புத்தகத்தை படித்துக்காட்டி விளக்கம் அளித்தார் ஆ.ராசா. இது ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில்தான், தி.மு.க.வினரை பற்றி அதே புத்தகத்தில் பெரியார் மிகவும் இழிவாக கூறியிருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதாவது, ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, கோவையில் நேற்று பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, “எதற்கெடுத்தாலும் தந்தை பெரியாரின் மரண சாசனம், இறுதிப் பேருரையில் இருக்கிறது என்று சொல்லும் ஆ.ராசாவே, அதே புத்தகத்தில் 21-வது பக்கத்தில் இருக்கும் சில விஷயங்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘ஒரு ஓட்டுக்காக பொண்டாட்டியைத் தவிர மத்த எல்லாவற்றையும் கொடுக்கிறான்.

யார் குடுக்குறது நம்ம முன்னேற்றத்து கழகக்காரன்தான். அவனுக்கு பொண்டாட்டி, பிள்ளைகளைப் பற்றி கவலை இல்லை. இன்னும் கொஞ்சநாள் போனால், பொண்டாட்டியைக்கூட கொடுத்து விட்டு வாங்குவான். ஏன்னா, பதவி அவ்வளவு உயர்வா போச்சு’ என்று அதே பெரியார்தான் கூறியிருக்கிறார். நீங்கள் காட்டிய அதே புத்தகத்தில்தான் பெரியார் இதையும் எழுதி இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை. பெரியார்தான் சொல்லி இருக்கிறார். இதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இதைப் பற்றியும் நீங்கள் மேடைகளில் பேசலாமே. தவிர, இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் வைத்திருக்கிறார்” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். இதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it