அப்பன் வகித்த பதவியை மகன்…   மகன் வகித்த பதவியை பேரன் – ராஜீவ் காந்தி ஆவேசம்!

அப்பன் வகித்த பதவியை மகன்… மகன் வகித்த பதவியை பேரன் – ராஜீவ் காந்தி ஆவேசம்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவர் பொறுப்பினை ஏற்று இருக்கிறார். இந்த நிலையில், அந்த கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி சூரிய குடும்பத்தை வெளுத்து வாங்கியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருப்பவர் ராஜீவ் காந்தி. இவர், நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அந்த வகையில், தி.மு.க.வையும், பட்டத்து இளவரசர் உதயநிதியையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில், சீமானிடம் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, சீமானின் செயல்பாடுகளையும் அவரது உண்மையான சுயரூபங்களையும், தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தோலுரித்து வந்தார். நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்திருந்த அப்பாவி தம்பிகள் பழைய தம்பியான ராஜீவ் காந்தியை வறுத்தெடுக்க துவங்கினர்.

இந்த நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் துணையுடன் ராஜீவ் காந்தி திடீரென அக்கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து, தி.மு.க. தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் மற்றும் அரசு பஸ்களுக்கு பெயிண்ட் அடிக்கும் காண்ட்ராக் பணி அவரை தேடி வர துவங்கியது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க.வின் தலைவராக போட்டியிட நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்.

சமூகநீதி கட்சி, ஐனநாயக கட்சி என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.வில், ஸ்டாலினை தவிர வேறு தலைவர்களே இல்லையா? இதுதான், உட்கட்சி ஐனநாயகமா என்று பலர் தி.மு.க.வை விமர்சனம் செய்ய துவங்கினர். இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் தலைவர் பதவி குறித்து, அக்கட்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்காணொளியில் ராஜீவ் கூறியதாவது ;

குடும்ப அரசர்களை போல், குறுநில மன்னர்களை போல், அப்பன் வகித்த பதவியை மகன் வகிக்கிறான். மகன் வகித்த பதவியை பேரன் வகிக்கிறான். 50 ஆண்டுகால ஐனநாயக நாட்டில், 50 ஆண்டுகால திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த சமூகநீதி கட்சிக்கு. ஒரே, குடும்பத்தில் இருந்து தலைவன். கருணாநிதி 50 ஆண்டுகள் தலைவர். அடுத்த தலைவர் ஸ்டாலின். அதற்கு, அடுத்து உதயநிதி ஸ்டாலின் தலைவன் இது ஒரு கட்சியா என்ற வகையில் பேசியிருந்தார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it