திருச்சி மணப்பாறையை சேர்ந்த குழந்தை சுஜீத் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணமடைந்ததற்கு பொங்கிய ஜோதிமணி, கனிமொழி, உள்ளிட்டவர்கள் தற்போது எங்கே? பதுங்கி இருக்கின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜீத் எனும் குழந்தை தனது வீட்டின் அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அன்றைய, ஆளும் கட்சியான அ.தி.மு.க. பெரும் முயற்சி எடுத்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. எனினும், இந்த துயர சம்பவத்தில் கூட எதிர்க்கட்சியினர் பச்சை அரசியல் செய்தனர். அந்த வகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டவர்கள் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசு மீது வீண் பழியை சுமத்தி இருந்தனர்.
இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, இந்த விடியல் ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு துர்மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் 6 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து மரணமடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இச்சம்பவம், குறித்து கனிமொழியோ, ஜோதிமணியோ இன்று வரை வாய் திறக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.
இப்படிப்பட்ட சூழலில், விடியல் ஆட்சியில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா 17. மருத்துவர்களின் தவறான சிகிச்சையில் உயிர் இழந்ததாக சொல்லப்படும் சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருக்கிறது. இதுகுறித்து, இன்று வரை வாய் திறக்காமல் ஜோதிமணி, கனிமொழி எங்கே? பதுங்கி இருக்கின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.