தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக, மாற்றுவதே எனது லட்சியம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அது சுத்த பொய் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. இதனிடையே, கோவை மாவட்டம் அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே கழிவறைகள் கட்டப்பட்டன. இதில், வேடிக்கை என்னவென்றால், ஓரே கழிவறையை இருவர் பயன்படுத்துவது போன்று அது வடிமைக்கப்பட்டது தான். அதுகுறித்தான, புகைப்படம் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தி.மு.க.வை நெட்டிசன்கள் நாரடித்து இருந்தனர். இந்த, கழிவறைக்கு கதவுகளும் தண்ணீரும் இல்லை என்பது தான் ஹைலைட்.
இதனிடையே, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், தனது பெயரிலான அறக்கட்டளை உதவியுடன் சேப்பாக்க-திருவல்லிகேணி பம்பிங் ஸ்டேசன்-ரிச்சி தெரு சந்திப்பில், ரூ.20இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறையை கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட மாடல் கக்கூஸ் என்றால், கதவுகள் இருக்காதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.