ஒன்ஸ்மோர் கேட்க சொல்லி மீண்டும் ஆங்கிலத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

ஒன்ஸ்மோர் கேட்க சொல்லி மீண்டும் ஆங்கிலத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

Share it if you like it

இது சென்னை அணிக்கான பாராட்டு விழாவா? அல்லது தமிழக முதல்வருக்கான பாராட்டு விழாவா? என்று மக்கள் கேள்வி.

சென்னை மழை வெள்ளத்தில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள், தங்களுக்கு போதிய உதவிகளை தமிழக அரசு செய்யவில்லை என தங்கள் வேதனையையும், கோவத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் அது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல், தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை அணிக்கு, பாராட்டு விழா நடத்தி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணிக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி கொண்டு தம்மை பற்றியும், தமது அரசை பற்றியும், பாராட்டவே இந்த விழாவினை தமிழக முதல்வர் நடத்தியுள்ளதாக பலர் கடுமையான குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளனர். இது போன்ற பாராட்டு விழாவிற்கு முக்கியத்துவம் வழங்காமல் மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image
Image
Image

Share it if you like it