Share it if you like it
பிரபல ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது தி.மு.க வழக்கு பதிவு செய்து இருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என பொதுமக்கள் கருத்து.
- தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் மற்றும் நடிகையுமான காயத்திரி ரகுராம் அவர்கள் தி.மு.க-வின் நிர்வாகி ஜெயசந்திரன் என்பவன் மீது புகார் தெரிவித்தும் இன்று வரை தமிழக காவல்துறை எந்தவித நடவடிக்கையையும் அவன் மீது எடுக்காமல் மெளனம்.
- வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு பாரதப் பிரதமரை கொலைக்கார் என்று பேசியதற்கு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறை மெளனம்.
- வன்னியரசு மீது பா.ஜ.க நிர்வாகிகள் புகார் மனு கொடுத்த பின்பும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் காவல்துறை மெளனம்.
- ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் மாரிதாஸ் மீது கொடுத்த புகாரின் மீது 17 நிமிடத்தில் FIR பதிவு.
ஆளும் கட்சியின் ஏவல் துறையாக தற்பொழுது காவல்துறை மாறி வருகிறது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை என பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஊடகவியலாளர் மாரிதாஸ் கைது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் மற்றொரு பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it