தி.மு.க முன்னாள் கவுன்சிலர் உதயசூரியன் என்பவர். தி.மு.க அரசிற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக ரேசன் கடையில் வழங்கப்பட்ட அரிசியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில், வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில். பல்லி இருந்ததை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய நந்தன் என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. தனது தந்தை நந்தனுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு, கடும் மன உளைச்சல் அடைந்த அவரது மகன் குப்புசாமி என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர், உதயசூரியன் என்பவர். ரேஷன் கடையில் தனக்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்து. ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததை சுட்டிக்காட்டிய, நந்தனுக்கு ஏற்பட்ட அதே நிலைமை தி.மு.க அரசுக்கு எதிராக கோவப்பட்ட, உதயசூரியனுக்கும் ஏற்பட்டு விட கூடாது. ஏன்னெனில் கருத்து சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி தி.மு.க என்பது குறிப்பிடத்தக்கது.