தொலைக்காட்சி விவாதத்தின்போது நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல், ஸ்டாலின் புராணம் பாடிய தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணனால் நேரம் விரையமானதுதான் மிச்சம் என்று புலம்புகிறார்கள் பார்வையாளர்கள்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனில் சிக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தியர்கள் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம், நாடு திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் இந்த பெரும் முயற்சிக்கு பல மாநில முதல்வர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மோடி அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வருவதற்காக சிறப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவில், எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சூழலில்தான், டைம்ஸ் நவ் ஊடகம் ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பளார் சரவணன் கலந்து கொண்டார்.
இதில்தான் நெறியாளர் பத்மஜா எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் திணறிய சரவணன், மோடி அரசை விமர்சித்ததோடு, ஸ்டாலின் புராணத்தை பாடி பார்வையாளர்களின் நேரத்தை வீணடித்திருக்கிறார். கேள்வி: “ஆபரேஷன் கங்கா’ கடந்த 10 நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. தி.மு.க. அரசு அமைத்திருக்கும் குழுவின் நோக்கம் என்ன? இந்திய அரசால் மட்டுமே உக்ரைன் அரசிடம் பேச முடியும். மாநில அரசால் அது முடியாதே? இதற்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன், வழக்கம்போல நேரடி பதிலை அளிக்காமல். ஸ்டாலின் புராணத்தையும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று விமர்சனம் செய்தும், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் நேரத்தையும் வீணடித்தார். இதுதான் பார்வையாளர்களின் விமர்சனத்து உள்ளாகி இருக்கிறது.