தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர்களுக்கு அண்மையில் வீட்டுமனை பட்டா வழங்கி இருந்தார். அந்த வகையில், எங்களுக்கு இந்த வீடே வேண்டாம் என அவர்கள் போராட்டம் நடத்திய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பயனாளிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் என தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினுக்கு முத்ரா கடன் மற்றும் சுவாநிதி திட்டத்தின் கீழ் உதவி புரிந்த தமிழக முதல்வருக்கு எனது நன்றி என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற தி.மு.க. அரசின் சுயரூபத்தை தோலுரித்து காட்டி இருந்தார்.

இதையடுத்து, நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமிழக அரசு வழங்கிய வீடும் வேண்டாம், இடமும் வேண்டாம் என்று நரிக்குறவர்கள் போராட்டம் நடத்திய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
