சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்ப் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும் என்ற அறிவிப்பிற்கு தமிழக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு மக்களின் வரிப்பணம் பலவகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வெள்ளையறிக்கை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் என தி.மு.க அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டன. இப்படியான, ஆலோசனைகளை வழங்க தான் தமிழக முதல்வருக்கு 5 பொருளாதார நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டார்களா? என்று பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
உத்தரபிரதேசத்தில் 23 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் வெறும் 8 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என பிரபல அரசியல் விமர்சகர் அக்கினிஸ்வரன் அண்மையில் பகீர் தகவலை வெளியிட்டு இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இப்படியாக, தமிழகம் தொடர்ந்து மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இதேநிலை நீடித்தால் தமிழகம் இலங்கை போல மாறிவிடும் என்று எழுத்தாளர் மாரிதாஸ் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். பயனுள்ள திட்டங்களை ஆளும் கட்சி கொண்டு வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். அந்த வகையில், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்ப் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். இதற்கு, ரூ. 8.43 கோடி சென்னை மாநகராட்சி பட்ஜட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் செல்ல நல்ல ரோடு இல்லை, குடிக்க நல்ல நீர் இல்லை, தேங்கிய மழை நீர் செல்ல வழியில்லை, இப்படி சொல்லிக் கொண்டே போக கூடிய ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. இதற்கு, தீர்வு காணாமல் பெயர்ப் பலகைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியமா? மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவே இது வழிவகுக்கும் என நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவது, டீ குடிப்பது, ஜிம்மில் ஒர்க் அவுட், செய்வது என தனது நேரத்தை செலவிட்டு வரும் முதல்வர் இந்த திட்டத்தை ரத்து செய்ய முன்வர வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.