தமிழகத்தில் உள்ள, மதுபான பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும். என்று தமிழக அரசுக்கு நீதிபதி சரவணன் சமீபத்தில் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருந்தார். அதனை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் கோவத்தை உருவாக்கியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை உடனே மூடுவோம். என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் சமயத்தில், தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தனர். இந்த வாக்குறுதியை நம்பி பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாக அந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், டாஸ்மாக் தொடர்பாக வரும் செய்திகள், அனைத்தும் தமிழக மக்களிடையே, பெரும் ஏமாற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. .
அந்த வகையில், ”பார் டெண்டர் உரிமைகள் அனைத்தையும், தி.மு.க.வினருக்கே அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி வருகிறார். என பார் உரிமையாளர்கள் அமைச்சரின் வீட்டை சில மாதங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் 11% அதிகரித்திருப்பதாக அந்நிர்வாகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, பப்கள் மற்றும் தனியார் ஏ.சி. பார்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணிவரையும், 5 நட்சத்திர ஹோட்டல்களில் 24 மணி நேரமும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் ஹோட்டல்களில் காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரையும் பார்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி வழங்கி இருந்தது.
இப்படியாக, தி.மு.க அரசு தனது தேர்தல், வாக்குறுதியை தொடர்ந்து காற்றில் பறக்க விட்டு வருகிறது. இந்த சூழலில் தான், தமிழகத்தில் உள்ள மதுபான பார்களை 6 மாதங்களுக்குள், மூட வேண்டும் என்று நீதிபதி சரவணன். சமீபத்தில் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருந்தார். நீதிபதியின் இந்த முடிவிற்கு, சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். ஆனால், தமிழக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.