தமிழகத்தில் பெட்ரோல், டீசல், விலை அதிகமாக இருப்பதால். தமிழக லாரிகள் கர்நாடக மாநிலத்தை நோக்கி படையெடுப்பதால் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த பெட்ரோல் பங்க் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல், விலையை ஜி.எஸ்.டிக்குள், கொண்டு வருவோம். என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்து. ஆனால், ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பு, இன்று வரை தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக பெட்ரோல், டீசலை, நம்பி தொழில் புரிபவர்கள் பெரும் இன்னல்களையும், அவதியையும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வு அதிகமாக இருப்பதால். தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவை நோக்கி தமிழகத்தை சேர்ந்த லாரி ஒட்டுனர்கள், டீசல் நிரப்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல பத்திரிக்கையான தினமலர் வெளியிட்டுள்ளது.