ஹிஜாப் விவகாரத்தில், தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த, அடிப்படைவாதிகளுக்கு தனது கடும் கண்டனத்தையும், இது தமிழ்நாடா அல்லது சுடுகாடா? என மாஜி நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்த செய்தியினை எந்த ஒரு ஊடகமும் வெளியிடாமல், மக்களிடம் இருந்து மறைத்து உள்ளது. இது தான், ஊடக அறமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் சிலர், திடீரென கடந்த ஜனவரி மாதத்தில் ஹிஜாப், புர்கா, பர்தா ஆகியவற்றை அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு, கல்வி நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அடிப்படைவாத மாணவிகளோ தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு, பதிலடியாக ஹிந்து மாணவிகள் சால்வையும், ஹிந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என போர்க்கொடி தூக்கினர். இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அந்த வகையில், இந்த போராட்டம் மேலும் தீவிரம், அடையாத வண்ணம் ஹிஜாப், காவி ஆகிய ஆடைகளுக்கு தடை விதித்தது மாநில அரசு. இதுதவிர, பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தது. இதை எதிர்த்து, அடிப்படைவாத அமைப்பினர் அம்மாநில ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் தான், ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஹிஜாப் இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய கடமையல்ல. ஆகவே, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை கண்டித்து, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. அதன்படி, கடந்த (மார்ச் 17-ம் தேதி) பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்தான் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆர்ப்பாட்ட மேடையிலேயே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
அந்த வகையில், கர்நாடக நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு, மாஜி நீதிபதி ராமசாமி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆனால், இது குறித்த செய்தியினை எந்த ஒரு ஊடகமும் வெளியிட்டவில்லை. இது தான் ஊடக தர்மமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீதிபதி பேசிய காணொளி லிங்க் இதோ.
இதுதான் திராவிட மாடல்