நீர்பாசன துறை அமைச்சருக்கு குவியும் கண்டனம்!

நீர்பாசன துறை அமைச்சருக்கு குவியும் கண்டனம்!

Share it if you like it

இந்தியாவையே உலுக்கிய விருதுநகர் சம்பவத்திற்கு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் எடுத்து இருக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் நீர்பாசனதுறை அமைச்சருமாக இருப்பவர் துரைமுருகன். இந்தியாவையே அண்மையில் உலுக்கி எடுத்த விருதுநகர், சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த வகையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர், பலமுறை பாலியல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பெண்ணை வன்கொடுமை செய்த குற்றவாளிகளை, கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்து இருந்தனர்.

அந்த வகையில், பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையாக பார்க்கப்படுகிறது விருதுநகர் சம்பவம். இதனை தொடர்ந்து, தமிழக காவல்துறை குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், கொடூர குற்றம் புரிந்த தி.மு.க மாவட்ட இளைஞரணி நிர்வாகி, ஜூனைத் அகமத்தை கட்சியை விட்டு தற்காலிகமாக, நீக்குவதாக துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதான், மக்களிடையே தற்பொழுது கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வழக்கம் போல நெட்டிசன்கள் தி.மு.க.வை தும்சம் செய்து வருகின்றனர்.


Share it if you like it