விருதுநகர், வேலூரை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் விடியல் ஆட்சியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இச்செய்தியினை பிரபல ஊடகமான நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியலை தருவோம் என ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தார். தி.மு.க. ஆட்சி அமைந்து 9 மாதங்களை கடந்த விட்டது. இன்று வரை பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் சுகன்யா-22 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர் சுகன்யாவை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவமாக கடலூரில் இந்த துயர நிகழ்வு நடந்துள்ளது. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தில் உலகிற்கே வழிகாட்டியாக, திகழும் மாநிலத்தில் இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் தனது தனித்தன்மையை தமிழகம் இழந்து விடும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.