சென்னை திருநீர்மலையில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் பிரயாணி கடை மீது தாக்குதல் நடத்திய தி.மு.க நிர்வாகி.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது சுண்டல் கடை, பிரியாணி, தேங்காய் மற்றும் பியூட்டி பார்லர் கடை மீது தாக்குதல் நடத்தியது மக்களுக்கு நினைவு இருக்கலாம். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகம் மற்றும் அம்மா கிளினிக் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பல தில்லு முல்லு சம்பவங்களை அரங்கேற்றி தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதை அனைவரும் நன்கு அறிவர். அப்பொழுது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தி.மு.க.வினர் மிரட்டிய காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படியாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நான் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டால், சிறப்பான ஆட்சியை வழங்குவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் இன்று வரை தொடர்கதையாக உள்ளது. இதுதான், அந்த சிறப்பான ஆட்சியா? என்று மக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், சென்னை திருநீர்மலையில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் பிரியாணி கடை மீது தி.மு.க இளைஞர் அணி செயலாளர் தினேஷ் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் லிங்க் இதோ.