சென்னை கொடூங்கையூரில் புதிதாக வீடு கட்டி வரும் பெண்ணிடம் 34-வது வார்டு கவுன்சிலரின் கணவரும் அவரின் அடியாட்களும் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஐனநாயக வெற்றியா அல்லது பணநாயக வெற்றியா என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். தி.மு.க.வின் வெற்றிக்கு பின் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; தவறு செய்தால் யாராக இருந்தாலும் விட மாட்டேன் அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பேன் என்று பேசியிருந்தார்.
முதல்வரின் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்காமல், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இப்படியாக, தமிழக முதல்வருக்கு தி.மு.க.வினர் தொடர்ந்து ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட் கொடுத்து வருகின்றனர். சென்னை திருநீர்மலையில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் பிரியாணி கடை மீது தி.மு.க இளைஞர் அணி செயலாளர் தினேஷ் என்பவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், சென்னை கொடூங்கையூரில் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவி என்பவர் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டி வருகிறார். இவரிடம், வீடு கட்ட வேண்டும் என்றால் தனக்கு 10 லட்ச ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், என தி.மு.க.வின் 34-வது வார்டு பெண் கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் தனது அடியாட்களுடன் மிரட்டிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது. முதலீட்டை ஈர்க்க பேரன், பேத்தி என குடும்பத்துடன் துபாய் பறந்த முதல்வருக்கு, இது எல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.