காவலரை பார்த்து டேஷ்: மதுபோதையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் அராஜகம்!

காவலரை பார்த்து டேஷ்: மதுபோதையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் அராஜகம்!

Share it if you like it

சென்னை ராயபுரம் பகுதி 51 வது வார்டு தி.மு.க கவுன்சிலரின் கணவர் ரோந்து பணியில் இருந்த காவலர்களை ஆபாசமாக திட்டிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தற்பொழுது தமிழகத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது. ஆட்சி பொறுப்புக்கு வந்து 9 மாதங்களை கடந்து விட்ட நிலையிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என தொடர்ச்சியாக வரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகமே பொள்ளாட்சியாக மாறி வருவதாக பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கட்டுபாட்டில் இல்லை. மக்களுக்கு போதிய பாதுகாப்பை, தமிழக அரசால் வழங்க முடியவில்லை, என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார். அதனை மெய்ப்பிக்கும், விதமாக தமிழக காவல்துறையினருக்கு உரிய மரியாதையும், பாதுகாப்பும் இல்லாத சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு, வி.சி.க. கொடி எங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாகத் திரிகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று காவல்துறைக்கு பகிரங்க மிரட்டலை அண்மையில் விடுத்திருந்தார்.

உலக புகழ் பெற்ற தமிழக காவல்துறையினர் இன்று தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து, அவமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில், சென்னை ராயபுரம் பகுதியில் தி.மு.க.வின் 51 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருடைய கணவர் ஜெகதீசன். இவர், மதுபோதையில் தெருவில் நின்று கொண்டு அடாவடி செய்துள்ளார். அப்போது, ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். இதனைதொடர்ந்து, எழுந்த வாக்கு வாதத்தில் ஜெகதீசன் மற்றும் அவரின் கூட்டாளிகள் காவலரை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.

/https://www.facebook.com/watch/?v=483104420221258&extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing


Share it if you like it