தமிழகத்தின் சொத்தான கச்சத் தீவை மீட்கும் முயற்சியில், பாரதப் பிரதமர் மோடி அரசு தீவிரம் காட்டி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு, அண்டை நாடுகளின் எல்லைகளில் நிகழும் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, இந்திய மாநிலங்களிடையே நிகழும் சண்டை, சச்சரவுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர இன்று வரை அரும்பாடுபட்டு வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த காவேரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து, அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையில் 50 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வந்த எல்லை பிரச்சனையை சில நாட்களுக்கு முன்பு சுமூகமான முறையில் தீர்த்து வைத்தது. மேலும், அடிப்படைவாதிகளால் காஷ்மீர் பண்டிட்கள் அனுபவித்த துயரங்களுக்கு, நிரந்தர தீர்வினை கண்டது என சொல்லிக் கொண்டே போகலாம். இதுதவிர, பாரதப் பிரதமர் மோடி மாநிலங்களின் பிரச்சனைகளை மிக கவனமாக கையாண்டு, தொடர்ந்து வெற்றிக்கு மேல் வெற்றியையும் குவித்து வருகிறார்.
அதன்படி, திராவிட முன்னேற்ற கழகம் தமிழக மீனவர்களுக்கு, செய்த வரலாற்று பிழையை திருத்தும் பணியில் மத்திய அரசு தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர். அதேசமயத்தில், உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைத்ததா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
1974 மற்றும் 1976-ல் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்த பொழுது, செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, 285 ஏக்கர் பரப்பளவு உள்ள கச்சத் தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்பொழுது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு இதுபற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல மூத்த பா.ஜ.க தலைவர்கள், தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இலங்கை தற்பொழுது ஊழல்வாதிகளின் பிடியில் சிக்கி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும், அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடும் பரிதாப காட்சிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இதையடுத்து, நமது அண்டை நாடான இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதுதவிர, தமிழகத்தின் சொத்தான கச்சத் தீவை மீட்கும் முயற்சியில் தனி கவனம் செலுத்த வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று உள்ளார். அப்பொழுது, பிரதமரை சந்தித்த முதல்வர் கச்சத் தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எப்படியோ? தெரிந்து கொண்டு, அதிலும் ஸ்டிக்கர் ஒட்ட முயல்வார் ஸ்டாலின் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா கச்சத் தீவை விரைவில் மீட்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.