தமிழக அரசின் சேமிப்பு கிடங்கின் அவலம் காணொளி வெளியிட்டு நபர்.
தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு மக்களின் வரிப்பணம் பலவகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெள்ளையறிக்கை வெளியிட்டு இருந்தார். தமிழகத்தின் நிலைமை இவ்வாறு இருக்க, 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடியில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தி.மு.க அரசு தெரிவித்து இருந்தது.
மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இப்படி, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், தமிழக அரசு செயல்படுவது வேதனைக்குறிய விஷயம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சேமிப்பு கிடங்கின் தற்பொழுதைய அவலநிலையை கண்டித்து காணொளி ஒன்றினை நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் விளைந்த நெல் மூட்டைகள் சரியான விலைக்கு போகாதது பற்றி வேதனையுடன் பேசி இருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் சேமிப்பு கிடங்கின் அவலத்தை ஒருவர் சுட்டிக்காட்டி தனது கோவத்தை வெளிப்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.