மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள எர்ரம்பட்டியில் மணல் திருட்டு மெளனம் காக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.
தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 11.00 மணிக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டதும், 11-05 மணிக்கு மாட்டு வண்டியை ஆற்றில் இறக்கி மணல் அள்ளலாம். எந்த அதிகாரியாவது தடுத்தால் நீங்கள் எனக்கு போன் செய்யுங்கள், அவர் அங்கு இருக்க மாட்டார் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது செந்தில் பாலாஜி பேசி இருந்தார். அதன்பின்பு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் மணல் திருடும் சம்பவங்கள் தொடர்கதையாக, இருந்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். மேலும், தமிழகத்தின் சொத்தான கனிமவளங்கள் அண்டை மாநிலங்களுக்கு, கடத்தப்படும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் என்கிற கிராமத்தில் எம்.சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்துவதாகக் கூறி, கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த 6 கிறிஸ்தவ பாதிரியார்கள் மணல் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி, சட்டத்திற்கு புறம்பாக மணல் திருட்டில் ஈடுபட்டு பலர் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில், பாலமேடு அருகிலுள்ள எர்ரம்பட்டி பகுதி விவசாய நிலங்களை சீரமைப்பதாக அனுமதி பெற்ற தி.மு.க.,வினர் பாலமேடு மஞ்சமலை ஆறு, பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் மண் அள்ளி வருகின்றனர். கனிமவளத்துறையிடம் 3 முதல் 6 அடி ஆழத்திற்கு அனுமதி பெற்று ஒரு வாரமாக 10 அடிக்கு மேல் மணல் அள்ளப்படுவதாக பிரபல பத்திரிக்கையான தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. இச்சம்பவத்திற்கு நேர்மையான சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாரதப் பிரதமர் மோடி ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால், போர்க்கொடியை உயர்த்தும் பியூஸ் மானுஷ், பூ உலகின் நண்பர்கள் மதுரையில் நிகழும் அட்டூழியம் குறித்து இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.