பரதநாட்டிய கலைஞர் மீது பாலியல் குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

பரதநாட்டிய கலைஞர் மீது பாலியல் குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Share it if you like it

தமிழக பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது இசைப்பள்ளி ஆசிரியை பாலியல் புகார் தெரிவித்து இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, தனக்கு ஆதரவாக செயல்படும் நபர்களை தேடிப்பிடித்து அரசு பதவிகளை வழங்கி வருகிறார். இதில், கொடுமை என்னவென்றால் முதல்வர் நியமனம் செய்யும் நபர்கள், ஏதேனும் சர்ச்சையில் சிக்கியவர்களாக இருப்பது தான். தமிழக பெண்களின் இடுப்பு குறித்து ஆய்வு நடத்திய திண்டுக்கல் ஐ. லியோனிக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் பதவி. அதன்பின், கள்ள உறவுக்கு திருமணம் கடந்த உறவு என்று புதுவிளக்கம் கொடுத்த சுப.வீ-க்கு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினர் பதவி.

அதேபோல, வருமான வரித்துறை அதிகாரி சரவணனுக்கு தமிழ்நாடு பாடநுால் நிறுவன அலுவல் சாரா கல்வி குழு உறுப்பினர் பதவி. இவர் மீதும் கடும் சர்ச்சைக்குறிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இப்படி, தமிழக பெண்களை இழிவுப்படுத்தியவர்களுக்கு அரசு பதவியா? என்று சமூக ஆர்வலர்கள் பலர் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் தான், தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக சில மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டவர் பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன். இவர் மீது கரூர் மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும். கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த பிப்-28 கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், எங்கள் பள்ளியை ஆய்வு செய்ய வந்தார். அப்பொழுது, அனைவர் முன்பும் என்னை அவமதிக்கும் வகையில் பேசினார். அதன்பின், தலைமை ஆசிரியை அறைக்கு, என்னை மட்டும் தனியே வரச்சொல்லி கதவை மூடினார். அங்கு, என் தோள்பட்டை மேல் கை வைத்து, இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து, ‘இப்படி நடனமாட வேண்டும்’ என, சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ‘ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு, உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்’ என, ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். இச்சம்பவம், என் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. இதற்குபின், நாம் உயிர் வாழ வேண்டுமா? என்று எண்ணி, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. இப்பிரச்னை மீது எடுக்கப்படும் நடவடிக்கையால், வரும் காலங்களில் பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாக, சர்ச்சைகளில் சிக்கும் நபர்களை நியமனம் செய்வது முதல்வரா அல்லது அவரது புதல்வரா யார்? அந்த மர்ம நபர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நானே வெளியே போகிறேன் என்று சொல்லிய பிறகும்... காயப்படுத்த வேண்டும்  என்பதற்காக நரசிம்மன் சொன்ன அந்த வார்த்தை.." - கொதித்த ஜாகீர் உசேன் ...


Share it if you like it