ராமசாமி நிகழ்ச்சிக்கு பாராட்டு: ஸ்டாலினுக்கு குவியும் கண்டனம்…

ராமசாமி நிகழ்ச்சிக்கு பாராட்டு: ஸ்டாலினுக்கு குவியும் கண்டனம்…

Share it if you like it

தனியார் தொலைக்காட்சியில் ஈரோடு ராமசாமியை மையப்படுத்தி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களை நேரில் அழைத்து தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார். இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கிய ஸ்டாலினுக்கு பள்ளி மாணவி லாவண்யா குடும்பத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்க நேரம் இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம். இவரது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த இவரை, கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி பள்ளி ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மாணவி லாவண்யா மறுப்புத் தெரிவித்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி நிர்வாகம் மாணவிக்கு கடுமையான மன அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதானல் மனம் வெறுத்து போன லாவண்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

பா.ஜ.க, இந்து முன்னணி, வி.ஹெச்.பி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் மாணவிக்கு நீதிகேட்டு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கினை சிபிஐ-க்கு மாற்றி அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை லாவண்யா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கி இருந்ததை அனைவரும் நன்கு அறிவர். இந்த நிலையில் தான், தனியார் ஊடகம் ஒன்று ஈ.வெ.ரா குறித்து நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளது. இதில், நடித்த குழந்தைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவையே உலுக்கிய லாவண்யா மரணத்திற்கு இன்று வரை அவர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்பதே நிதர்சனம். துளியும் மனிதாபிமானம் இல்லாத ஸ்டாலினின் உண்மையா சுயரூபத்தை இப்பொழுதாவது தமிழக மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it