விடுதலை சிறுத்தை கட்சிகளை அவமதித்தது போன்று, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான காங்கிரஸ்-க்கு, சொன்ன இடங்களை வழங்காமல் ஆளும் தி.மு.க அரசு அவமதித்துள்ள சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இது பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி, என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை ஆளும் கட்சி மீது முன்வைத்தது. தனித்தே களம் கண்ட பா.ஜ.க மூன்றாவது, பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்று ஆளும் கட்சிக்கு இனிமா கொடுத்து உள்ளது. ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ். இன்று தி.மு.க-விடம் கையேந்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, மேயர், துணை மேயர் மற்றும் பேரூராட்சி பதவிகளில் சிலவற்றை, எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. இதற்கு, ஆளும் கட்சியான தி.மு.க சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், ஆறு நகராட்சி தலைவர் பதவிகளை காங்கிரஸ்-க்கு ஒதுக்க தி.மு.க முன்வந்தது. ஆனால், அதிலும் சொன்ன இடங்களை வழங்காமல், வெறும் ஒரே இடத்தை மட்டுமே வழங்கி ஆளும் கட்சி காங்கிரஸை அவமதித்துள்ளது.. இது குறித்த ஆதாரத்தினை பிரபல அரசியல் விமர்சகர் செல்வ குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதே நிலைமை தான் வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஏற்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.