மதுரை மாவட்டத்தை சேர்ந்த துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் சிறுமி இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்பு அவர் உயிர் இழந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துர்காவின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி போராட்டம் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் மகள் துர்கா 17 வயது சிறுமியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த மதீனா பேகம் மகன் நாகூர் ஹனிபா என்பவர் காதலிப்பதாகக் கூறி இருந்தார். இதற்கு துர்காவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியில் சென்ற துர்கா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் தேடியும் துர்கா கிடைக்கவில்லை. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், மகளை காணவில்லை என்றும், அதே ஊரைச் சேர்ந்த மதீனா மற்றும் அவரது மகன் நாகூர் ஹனிபா ஆகியோர் கடத்திச் சென்று விட்டதாகவும் பிப்ரவரி 15-ம் தேதி காலையில் மேலூர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து, பிப்ரவரி 22-ம் தேதி மதுரை எஸ்.பி.யிடம் புகார் கொடுத்து இருந்தார் துர்காவின் தாயார். இதன் பிறகே, மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதுவும், சிறுமி மிஸ்ஸிங் என்பதுபோல மட்டும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சூழலில், கடந்த 1-ம் தேதி நள்ளிரவு துர்காவின் வீட்டுக்கு வந்த நாகூர் ஹனிபாவின் தாய் மதீனா, துர்கா சீரியஸாக இருப்பதாகவும், வந்து அழைத்துச் செல்லும்படியும் அவரது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், துர்காவின் தாயார் பதறியடித்துக் கொண்டு புறப்படவே, அவரது வீட்டு வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றிருக்கிறது. அதிலிருந்து இறங்கிய சிலர், குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த துர்காவை, அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த துர்காவின் தாய் தனது மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் துர்காவிற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.